Spread the love

சென்னை ஒயிட் சாலை அமைந்துள்ள ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் ஆலயம் நடக்கும் போராட்டம்

இன்று இருக்கும் பிரச்சினை புரிந்து கொள்ள நாம் இதுவரை என்ன நடந்தது என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்ட பணியில் மாதாவரம் முதல் சிறுசேரி வழித்தடத்தில் ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள 200 மேல் பழமையான ஶ்ரீ ரத்தின விநாயகர் ஆலயம் மற்றும் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம் பாதிக்கப்பட்டது.
அதற்கான சட்டப் போராட்டங்களை பக்தர்களின் சார்பாக ஆலயம் காப்போம் அமைப்பினர் கையில் எடுத்தனர்.

முதலில் மெட்ரோ ரயில் நிறுவனம் துர்க்கை அம்மன் ஆலயத்தின் கோபுரத்தை ஏழு மீட்டர் உள்ளே தள்ளி நிறுவுவதாக கூறினர், பணி முடிந்த பிறகு அந்தப் பகுதியை ஆலயம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினர் இரத்தின விநாயகர் ஆலயத்தில் அங்கிருந்து அகற்ற வேண்டும் அது ஒரு பொறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது என்றும் கூறினர்.

நமது வழக்கில் CMRL நிறுவனம் தாக்கல் செய்த பல தகவல்களை தகுந்த எதிர் வாதங்கள் மூலம் தவறு என்ற நிரூபித்து, இதை அன்று இருந்த முதன்மை அமர்வு நீதியரசர் ஆலய வளாகத்திற்கு வந்து உண்மையாக என்ன அறிந்து பின்பு மெட்ரோ நிறுவனம் அதன் சார்பாக ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தனர் அதில் முக்கியமாக நான்கு விஷயங்களை முன்னிறுத்தினர்.

Madras High Court Judge, Justice K. Kumaresh Babu, visited Shri Durgai Amman Temple and Sri Rathina Vinayakar Temple at Whites Road Royapettah, Chennai

https://www.verdictum.in/news/madras-high-aalayam-kaappom-foundation-ltd-v-state-of-tamil-nadu-justice-k-kumaresh-babu-1546600

  1. மெட்ரோ ஸ்டேஷன்ல இருந்து மக்கள் வெளியே வரும் என்ட்ரி அண்ட் இன்சிட் பாயிண்ட் ஆலய வளாகத்தில் இருந்து வேறு பகுதிக்கு மாற்றம் செய்வதாகவும் .
  2. துர்க்கை அம்மன் ஆலய கோபுரத்தை 5 மீட்டர் தெற்கு பக்கமாக மாற்றம் செய்து வைத்துவிட்டு பணிகள் முடிந்த பின்பு மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதாகவும்.
  3. படிகள் நடக்கும் காலகட்டத்தில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல 4 மீட்டர் வழி உருவாக்கித் தருவதாகவும்.
  4. ரத்தின விநாயகர் ஆலயம் மெட்ரோ பணிகள் நடக்கும் வேளையில் வேறொரு இடத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்துவிட்டு பின்பு அறநிலையத்துறை கூறும் இடத்தில் புதிய ஆலயத்தை மெட்ரோ நிறுவனமே கட்டித் தருவதாகவும் உறுதி அளித்தனர்.

மேற்கூறிய நான்கு விஷயங்களிலும் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பின்பு இதை செயல்படுத்த CMRL நிறுவனம் அருகாமையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் முன்பு உள்ள OSR இடத்தை கையகப்படுத்த விளம்பரம் செய்து அதை எதிர்த்து யுனைடெட் இந்தியா நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது அந்த வழக்கில் நீதிபதி அவர்கள் மெட்ரோ நிறுவனம் அந்த நிலத்தை காயப்படுத்தக் கூடாது என்றும் வேண்டுமென்றால் அவர்கள் அவர்களின் பழைய திட்டப்படி செயல்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆலயம் காப்போம் அமைப்பினர் மேல்முறையீடு செய்தனர் அதை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ ரயில் நிர்வாகம் அவர்கள் முதன்மை அமர்வில் அளித்த உறுதிமொழிப்படி மெட்ரோ பணிகளை செய்ய அவர்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்று அவர்கள் தரப்பு உறுதியை அளித்தனர்
ஆலயம் காப்போம் அமைப்பும் முதன்மை அமர்வில் பிறப்பித்த உத்தரவுக்கு தங்களுக்கு எவ்விதமான எதிர்ப்பும் இல்லை என்று கூறுகிறோம் .
இதன் அடிப்படையில் யுனைட்டட் இந்தியா வழக்கில் பிறப்பிக்கப்பட்ட ஆணையை இடைக்கால தடை விதித்தனர்.

இந்நிலையில் மெட்ரோ நீர் நிர்வாகம் நீதிமன்றத்தில் அவர்கள் அளித்த உறுதிமொழியை மீறும் விதமாக ரத்தின விநாயகர் ஆலயம் அமைந்துள்ள 327/1 என்ற சர்வே நம்பர் கையகப்படுத்துவதற்கு விளம்பரம் 6.5.2025 வெளியிட்டனர்.

மேலும் அறநிலைத்துறைக்கு இரத்த விநாயகர் ஆலயத்தை உடனடியாக அகற்றி வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்ய தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக HRCE அவர்களுடன் இணைந்து மே 28ஆம் தேதி பாலாலயத்து பூமி பூஜை செய்ய முயற்சி எடுத்தனர் இதை பக்தர்கள் கடுமையாக எதிர்த்து மெட்ரோ ரயில் நிறுவனம் அவர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை இதுவரை மூன்றடி வழியை கொடுத்துள்ளனர் ஆகவே மெட்ரோ ரயில் நிறுவனம் அவர்கள் கூறிய நான்கு விஷயத்தையும் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி அல்லது MOU குடுத்த பிறகு ரத்ன ஆலயத்திற்கு பாலாலையும் செய்யலாம் என்று கூறி நடக்க இருந்த பாலாலயம் பூமி பூஜையை நிறுத்தினார்.

இத்தருணத்தில் இந்தப் பிரச்சனையை முழுமையாக புரிந்து கொள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் தாமே நேராக ஆலயத்திற்கு வந்து அங்கு உள்ள பிரச்சனையை புரிந்து கொள்ள 31.5.2025 ஆலயத்திற்கு வந்தார்.

அப்போது பக்தர்கள் அவரிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதுவரை மூன்று படி வழியே கொடுத்துள்ளனர் மேலும் அவர்கள் ரத்தின விநாயகர் ஆலயத்தை தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய காட்டும் இடம் மிகவும் சிறிது மக்கள் வந்து செல்வது கடினம் மேலும் எங்களுக்கு ரத்தின விநாயகர் ஆலயம் இதே இடத்தில் திரும்பி கட்டித் தருவோம் என்ற உறுதிமொழியும் அளித்த பிறகு தான் பணியை தொடர வேண்டும் என்றும் உறுதியாக கூறினர்.

இதையெல்லாம் கேட்ட ஆணையர் மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் பேசி சரி செய்கிறேன் என்று சென்றார்.

ஆனால் நடந்தது என்னவோ கண் துடைப்பு வேலைகள் தான் கடந்த ஜூன் 3 தேதி வேகமாக நான்கு மிட்டர் வழிக்கான பணிகள் அவசரகதியில் செய்தனர்.

உயர் அதிகாரிகளை அழுத்தம் காரணமாக கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் தெரிவிக்காமல் ஜூன் 5 தேதி அன்று மீண்டும் பூமி பூஜை செய்ய நாள் குறித்தனர் அன்று அங்கு வழிபாட்டிற்கு பக்தர்கள் எங்களுக்கு உறுதிமொழி அளிக்காமல் நீங்கள் இந்த பூஜையையோ பாலா ஆலயத்தையும் செய்யக்கூடாது என்று அவர்களுடன் வாதிட்டனர், இதை சற்றும் பொருட்படுத்தாது அறநிலைத்துறை அதிகாரிகளும் மெட்ரோ ரயில் அதிகாரிகளும், நீங்கள் கோருவது போல் மீண்டும் இரத்த விநாயகர் ஆலயம் அதன் இடத்தில் வராது நாங்கள் குடுக்கும் இடத்தில் கோயில் அமைத்துக்கொள்ளுங்கள், இதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறி அங்கு கூடியிருந்த பக்தர்களை காவல்துறை உதவியுடன் கைது செய்தனர், பின்பு பூமி பூஜையும் நடத்தி விட்டனர் இதை அறிந்த மேலும் பக்தர்கள் அங்கு வந்து அவர்கள் தற்காலிக கோவில் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

மெட்ரோ ரயில் நிறுவனம் தான் கூறிய வாக்குறுதிகளை மீறி கோயில் அருகாமையிலேயே மீண்டும் நுழைவாயிலை அமைக்க திட்டம் போடுகின்றனர் மேலும் நுழைவாயில் அங்கு வரும் பட்சத்தில் அதற்கு முன்பாக ரத்தின விநாயகர் ஆலயம் இருக்க முடியாது என்று அடாவடியாக செயல்படுகின்றனர் இது சட்டத்திற்கு புறம்பான விஷயம் என்று அனைவரும் அறிந்ததே இதற்கான சட்டப் போராட்டத்தை ஆலயம் காப்போம் மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆயிரம் விளக்கு ஸ்டேஷன் அமைவதற்கான கையக படுத்தப்பட்ட நிலங்களில் 90 விழுக்காடு இந்த கோயிலின் நிலங்கள் என்பது குறிப்பிடதக்கது.

அவர்கள் கையகப்படுத்தும் நினைக்கும் ரத்தின விநாயகர் ஆலயம் தடுத்து நிறுத்தவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர். அவர்கள் காமிக்கும் வரைபடத்தை சிறிய மாற்றங்கள் செய்தாலே இரத்தின விநாயகர் ஆலயமும் பாதுகாப்பாக இருக்கும் என்பது சாதாரண பாமர மக்களுக்கு கூட அறிந்த விஷயம் ஆனால் அதை செயல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறி வருகின்றனர் பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இப்படி ஒரு பழமையான ஆலயத்தை ஏன் அழிக்க வேண்டும் என்று துடிக்கின்றனர் இந்த ஆலயம் 200 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே உள்ளது.

நம்மை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்திலும் அது இப்போதற்கும் அதே இடத்தில் தான் இருந்துள்ளது நமது எதிரியாக இருந்த ஆங்கிலேயர்களே அந்த ஆலயத்தை அகற்றவோ, அழிக்கவோ முயற்சி செய்யவில்லை ஆனால் ஆன்மிக ஆட்சி செய்கிறோம் என்று கூறும் இன்றைய ஆட்சியாளர்கள் இதை ஏன் செய்ய துடிக்கின்றனர்.
ஒரு ஹிந்து ஆலயம் மெட்ரோ நுழைவாயிலுக்கு முன்பாக இருப்பது அவர்களுக்கு அசிங்கமாக படுகிறதா எத்தனையோ மாற்று மதத்தின் வழிபாட்டுத் தலங்கள் பாதிக்கப்படாமல் திட்டமிடும் மெட்ரோ நிர்வாகம் இங்கு பழமையான ஒரு ஆலயத்தை ஏன் அழிக்க துடிக்கிறது இது அவர்களுக்கு முதலாவது முயற்சி அல்ல ஏற்கனவே பூந்தமல்லி திருக்கச்சி நம்பி கோவில் குலத்தையும் விருகம்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் மற்றும் விருகம்பாக்கம் சுந்தர வரதராஜர் கோயில் மற்றும் காளியம்மன் கோவில் போன்றவற்றை பாதிக்கும் படி அவர்களின் திட்டங்களை பக்தர்கள் இணைந்து முறியடித்து உள்ளோம்.

துர்கை அம்மன் ராஜகோபுரம் பணிகள் செய்துமுடிக்க 3 மாதம் ஆகும் என்ற நிலையில் அதற்கு உள்ள பணிகள் செய்யாமல்.
தற்போது மீண்டும் CMRL நிறுவனம் மற்றும் HRCE பக்தர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், மீண்டும் 16.6.25 பாலாலயம் நடத்த முடிவு செய்து, காவல்துறை பாதுகாப்பு கோரியுள்ளனர்.

எப்படியாவது ரத்தின விநாயகர் ஆலயத்தை அங்கிருது அகற்றவேண்டும் ஏன் குறியாக உள்ளனர்?
தொடர்ந்து ஹிந்து ஆலயங்களை குறிவைக்கும் இந்த அரசின் செயல்பாடுகள் புரிந்து கொள்ளுங்கள் விழித்துக் கொள்ளுங்கள்.

நம் கோயில் நம் உரிமை.

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *